search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிப்பர் லாரி"

    • வாய்ப்பாடி வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகிறது.
    • சிறை பிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகளை 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் விடுவித்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி வழியாக சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்கு குழாய் வழியாக காவிரி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    வாய்ப்பாடி வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகிறது. இதில் அதிக பாரம் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளால் காவிரி குடிநீர் குழாய் கடந்த 6 மாதத்திற்கு முன்பே உடைந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் வாய்ப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சாலப்பாளையம் பகுதிக்கு காவிரி குடிநீர் முழுமையாக செல்லவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வாய்ப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியே சென்ற டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.

    அப்போது உடைந்த குழாயை சரி செய்தால்தான் லாரிகளை விடுவிப்போம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் லாரி உரிமையாளர்கள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.

    மேலும் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகளை 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர் இளவரசன் (வயது 32). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார். வேப்பூர் கூட்ரோடு அருகே மணலை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன் நிலை தடுமாறி, டிப்பர் லாரியின் பின்னால் மோதினார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த இளவரசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இளவரசனை பரிசோதித்த டாக்டர்கள், இவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினார்கள்.
    • சிறப்பு விருந்தினர்களாக தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டார்.

    சென்னை:

    தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்க முப்பெரும் விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.

    சங்கத்தின் பொதுக்குழு புதிய நிர்வாகிகள், பொறுப்பேற்றல், தலைநகர் ஐ.கே.எஸ். நாராயணனின் 60-ம் ஆண்டு மணிவிழா எவரெஸ்ட் சிகரம் தொட்ட முத் தமிழ் பெண் என்.முத்தமிழ் செல்விக்கு பாராட்டு விழா ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் சங்கத் தலைவராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.கே.எஸ். நாராயணன், செயலாளர், எம்.சாமிநாதன், பொருளாளர், எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஆகியோரை சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார், மணல் லாரி சங்கத் தலைவர் செல்லா ராசா மணி, லாரி சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தொழில் அதிபர் ஆர்.ஜெயராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

    • கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்
    • எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் சில வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவ்வப்போது சில வாகனங்கள் சிக்கி உள்ளன. அவற்றுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன. அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து 3 டிப்பர் லாரிகளுக்கும் ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

    • டிரைவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
    • கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பட்டி மணிகாரம்பாளை யத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வந்துள்ளது. இதற்கான உரிமையை புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கல் குவாரியில் இருந்து டிப்பர் லாரி மூலம் நம்பியூர் வேமாண்டம் பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மண் மற்றும் ரப்கல் ஏற்றி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் மாவட்ட அதிகாரிகள் லட்சுமி, சிலம்பரசன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது பனங்காட்டு பாளையம் அருகில் ரப் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். இதை தொடர்ந்து வாகன டிரைவரிடம் ஆவணங்களை கேட்ட பொழுது டிரைவர் அதிகாரி களை தரக்குறை வாக பேசியதாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அதிகா ரிகள் கொடுத்த புகாரின் அடி ப்படை யில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் நிர்மலா விசார ணை மேற்கொ ண்டா ர்.

    அப்போ து கல் குவா ரிக்கு முறை யான ஆவணம் இல்லை என வும், டிரை வர் சரியா ன பதில் அளிக்க வில்லை.

    அதைத்தொ ட ர்ந்து போலீ சார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரை சேர்ந்த கதிர்வேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    • இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பாளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது.
    • சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    காகாபாளையம்:

    சேலம் அருகே இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பா–ளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இது சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் இடங்கண சாலை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்ரும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    இதையடுத்து சாத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை சின்னம்பட்டி பிரதான சாலையில் உள்ள இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அங்கு சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.

    • கழிவு மண் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு வீணாகும் கழிவு மண்ணை ஒரு டிப்பர் லாரியில் ஏற்றி தனியாருக்கு சொந்தமான கிரசருக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது ஈங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூர் வழியாக கழிவு மண் ஏற்றி சென்ற லாரி சென்ற போது புலவனூரை சேர்ந்த பொதுமக்கள் கருக்கங்காடு என்ற இடத்தில் அந்த லாரியை சிறை பிடித்தனர்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் முத்துராஜ், ஈங்கூர் கிராம நிர்வாக அலுவலர் ரதிபிரியா, சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், ஈங்கூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பொதுமக்கள் அவர்களிடம் கூறுகையில்,

    தொழிற்சாலை கழிவுகளை லாரியில் கொண்டு சென்று கொட்டுவதால் புலவனூர் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் லாரியில் கொண்டு சென்று கழிவுகளை கொட்ட கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறை பிடிக்கப்பட்ட லாரியை போலீசார் சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    • கண்டமங்கலம் அருகே தந்தை-மகளை உயிர்ப்பலி வாங்கிய டிப்பர் லாரிைய டி.எஸ்.பி. பார்த்திபன் மடக்கி பிடித்தார்.
    • இளைஞர்களும், பொதுமக்களும் நேரில் வந்து வாழ்த்து கூறினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம், அவரது மகள் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அடையாளம் தெரியாத ஒரு டிப்பர் லாரி மோதி உயிரிழந்தனர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியைப் பிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கிராம பொதுமக்கள், இளைஞர்கள் இறந்தவர் உடல்களை போலீசார் மீட்க விடாமல் தடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி பார்த்திபன் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடமும், கிராம இளைஞர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அவர் பேசிய விதமும், அவர் அளித்த உத்த ரவாதமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அதன்பின், இறந்தவர் உடல்களை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பிடித்து விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையடுத்து, வெளிப்படையான முறையிலும்,அதே நேரத்தில் தனது சாதுரியதனத்தால் விசாரணை நடத்தி, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. பார்த்திபனுக்கு, கேணிப்பட்டு-திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் நேரில் வந்து வாழ்த்து கூறினர். மேலும் இதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் வாட்ஸ் அப்பில் டி.எஸ்.பி. க்கு சல்யூட் என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்து பெருமை சேர்த்துவருகின்றனர். 

    ×